வெள்ளி, நவம்பர் 27, 2026

இதயப் பிழைகள் இல்லாத கவிஞன்



யாப்பு எனும் சிறைக்குள்
அடைபடாத பறவை நீ!
எதுகை மோனை எனும்
ஒப்பனைகள் இல்லாத
இயற்கை அழகு உன் வரிகள்!
இலக்கண வேலிகளுக்குள்
நிற்கும் பயிர்கள் அல்ல
உன் கவிதைகள்;
மலை உச்சியில் தானாகப் பூக்கும்
காட்டுப் பூக்கள் அவை!
அதற்கு எந்தத் தோட்டக்காரனின்
அனுமதியும் தேவையில்லை!
மொழியைக் கற்றவன்
பண்டிதன் ஆகலாம்;
வலியையும் உணர்வையும் கற்றவனே
கவிஞன் ஆகிறான்!
உன் எழுத்துக்களில்
இலக்கணப் பிழைகள் இருக்கலாம்;
ஆனால், இதயப் பிழைகள் இல்லை!
அதனால்தான் உன்னை
'கவிஞன்' என்கிறது உலகம்!
எழுதுவதை நிறுத்தாதே...
கண்ணீருக்கு ஏது இலக்கணம்?
புன்னகைக்கு ஏது யாப்பு?
உன் உணர்வுகளே உன் மொழி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வீதி என்பது பந்தயக் களமல்ல!

  சாலையில் இருசக்கர வாகனத்தில் நிற்கிறேன்... இடதும் வலதும் பின்புறமும் இரும்புக் குதிரைகள் வரிசை கட்டி நிற்கின்றன! சிவப்பு விளக்கு அணைந்து ப...