சாலையில் இருசக்கர வாகனத்தில் நிற்கிறேன்...
இடதும் வலதும் பின்புறமும்
இரும்புக் குதிரைகள் வரிசை கட்டி நிற்கின்றன!
இரும்புக் குதிரைகள் வரிசை கட்டி நிற்கின்றன!
சிவப்பு விளக்கு அணைந்து
பச்சை விளக்கு கண் சிமிட்டிய நொடியில்...
முன்னால் ஏதோ பல கோடிப் பணம்
கட்டுக்கட்டாகக் கொட்டிக் கிடப்பதைப் போல,
அதை அள்ளுவதற்குப் பாய்கிறார்கள்!
பச்சை விளக்கு கண் சிமிட்டிய நொடியில்...
முன்னால் ஏதோ பல கோடிப் பணம்
கட்டுக்கட்டாகக் கொட்டிக் கிடப்பதைப் போல,
அதை அள்ளுவதற்குப் பாய்கிறார்கள்!
வேகம்... வேகம்... எங்கும் விவேகமற்ற வேகம்!
சாலையின் கோடுகளைத் தாண்டுபவர்கள்
வாழ்க்கையின் எல்லைக் கோட்டையும் தாண்டி விடுகிறார்கள்!
சாலையின் கோடுகளைத் தாண்டுபவர்கள்
வாழ்க்கையின் எல்லைக் கோட்டையும் தாண்டி விடுகிறார்கள்!
விதிகளை மதிக்காத பலர்
மதியிழந்து மண்ணோடு போகிறார்கள்!
விபத்துகளின் எண்ணிக்கையில்
விழிநீர் வடிக்கிறது வீதி!
மதியிழந்து மண்ணோடு போகிறார்கள்!
விபத்துகளின் எண்ணிக்கையில்
விழிநீர் வடிக்கிறது வீதி!
புதிதாய்ச் சிறகு முளைத்த இளைஞர்கள்...
காற்றைக் கிழித்துக் கொண்டு பறப்பதாய்க் கருதி,
காலனின் கரங்களில் விழுகிறார்கள்!
காற்றைக் கிழித்துக் கொண்டு பறப்பதாய்க் கருதி,
காலனின் கரங்களில் விழுகிறார்கள்!
"பிள்ளை ஆசைப்படுகிறானே" என்று
பெற்றோர்கள் பாசத்தால் வாங்கித் தரும் வாகனங்கள்,
சில நேரங்களில்...
அவர்களின் உயிரைப் பறிக்கும் எமவாகனங்களாகி விடுகின்றன!
பூப்பறிக்க வேண்டிய வயதில்
பிள்ளைகளின் உயிர் பறிபோவது
பார்க்கப் பரிதாபமாய் இருக்கிறது!

இளைஞர்களே!
சாலை என்பது பந்தயக் களமல்ல;
அது பாதுகாப்பாய்ப் பயணிக்க வேண்டிய பாதை!
சாலை என்பது பந்தயக் களமல்ல;
அது பாதுகாப்பாய்ப் பயணிக்க வேண்டிய பாதை!
வேகம் என்பது ஆபத்தின் அழைப்பிதழ்;
விவேகம் என்பதே அறிவின் அடையாளம்!
பொறுமை என்பது கோழைத்தனமல்ல;
அது உங்கள் உயிரைக் காக்கும் கவசம்!
விவேகம் என்பதே அறிவின் அடையாளம்!
பொறுமை என்பது கோழைத்தனமல்ல;
அது உங்கள் உயிரைக் காக்கும் கவசம்!
விதிகளைக் கற்றுக் கொண்டு வீதிக்கு வாருங்கள்...
விதிகளை மதித்து வீடு திரும்புங்கள்!
உங்களுக்காகக் காத்திருக்கும்
உயிர்களுக்காகவாவது நிதானமாய்ச் செல்லுங்கள்!
விதிகளை மதித்து வீடு திரும்புங்கள்!
உங்களுக்காகக் காத்திருக்கும்
உயிர்களுக்காகவாவது நிதானமாய்ச் செல்லுங்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக