ஞாயிறு, நவம்பர் 15, 2009

நாம் விடையா வினாவா…?தன்னை அறிய நாடியது
விடை
பிரபஞ்சமானது
வினா…

வினாவும்
விடையும்
வேறு வேறு
கோணங்களல்ல
கடலும் அலையும்போல
தங்கமும் நகையும்போல…

விடைகளைத்தேடி
பயணிக்கிறோம்
நாம்
வினாக்களல்ல…

விடைகளால்
தடுக்கப்படுபவைகள்
வினாக்களால்
உடைக்கப்படுகிறது…

தேர்வு
விடைகளுக்கல்ல
வினாக்களுக்கு…

விழுந்தது
விடையானதால்தான்
நியூட்டன்
வினாவானான்…

இருளும் ஒளியும்
விடையானதால்தான்
எடிசன்
வினாவானான்…

அறியப்படுவதெல்லாம்
விடைகளல்ல
ஆனால்
அனுபவிக்கப்படுதெல்லாம்
வினாக்கள்…

வாழ்க்கை
விடையாகத்தான் இருக்கிறது
பலருக்கு
வினாக்கள் தெரியவில்லை

விடைத்தேடும்
விடைகள்
வினாக்கள் ஆவதில்லை
வீணாகிக் கொண்டிருக்கிறது…

விடை
மர்மமல்ல
வினாத்தான்
கர்மமாக இருக்கிறது…

நாம் யார் என்று
வினாவைக் கேளுங்கள்
நாம் என்றே
விடைக் கொடுக்கும்…

அதனால் சொல்கிறேன்
நாம் வினாக்கள் அல்ல
விடைகள்…!

5 கருத்துகள்:

 1. வினா இருந்தால் தானே விடைகள் உருவாகும். மனிதன் உருவானதே வினாவிலிருந்துதான். அந்த வினாவிற்கு விடையாகத்தான் நமது ஜனனம். ஒருவனின் வினா விடையாகிறது என்பதே என் எண்ணம்.

  பதிலளிநீக்கு
 2. திகழ்.....உங்கள் வருகைக்கு நன்றி......
  ஜீவன் பென்னி.....உங்கள் வருகைக்கு நன்றி......

  நாம் விடையாகத்தான் இருக்கிறோம்....நாம் யார் என்ற வினா நம்மில் எழும்போதுதான் நாம் விடையாக இருப்பதை அறிமுடியும்.

  பதிலளிநீக்கு
 3. புது மாதிரியான சிந்தனை. நன்றாக இருக்கிறது இஸ்மத் பாய்

  பதிலளிநீக்கு