சனி, செப்டம்பர் 19, 2009

குரு சீடன்


குயவன் கையில்
களிமண்ணைப் போல்
குருவிடம் சீடன்…!

களிமண்ணை
குழைத்து
வளைத்து
நெளித்து
உருவகப்படுத்துகிறான்
குயவன்…

பொறுமை
போதனை
சோதனையைக் கொண்டு
பக்குவப்படுத்துகிறார்
குரு…

குருவின் கையில்
களிமண்ணாக
சீடன் இருந்தால்தான்
பொருளாக முடியும்.
பொருளாகவே குருவிடம் சென்றால்
அந்தபொருளுக்கு
பொருள் இருக்காது
அருள் இருக்காது
நயமிருக்காது
நளினமுமிருக்காது.

கடைந்த பாத்திரங்களை
ஈரம்காய்வதற்கு
நேரம்பார்ப்பான்
குயவன்.

தேர்ந்த சீடனிடம்
பணிவு
தணிவு
கனிவைப் பார்ப்பார் குரு…

கடைந்த பாத்திரங்கள்
நெருப்பில் சுடப்பட்டால்தான்
அது
பாத்திரங்களாகும்.

சுடப்படும்போது
சில பாத்திரங்கள்
உடைப்படுவதுண்டு
அப்படி உடைப்படும்போது
மீண்டும் அது
களிமண்ணாவதுமில்லை
பாத்திரமாவதுமில்லை.

சிலர் இப்படித்தான்
சுடப்படும்போது
உடைப்படுகிறார்கள்.

குரு
அன்புக்காட்டுவதும்
கருணைக்காட்டுவதும்
கோபப்படுவதும்
நாம் சுடப்படுவதற்கு
ஆம்
சுட்டப்பொருள் தான்
சூடு தாங்கும்.

களிமண்ணாக இருந்தாலும்
மீண்டும் பொருட்களாகலாம்
பொருட்களாய் காட்சித் தந்து
அரைவேக்காடாய்
உலையில் உடைப்பட்டால்
யாருக்கு லாபம்.?

பக்குவப்பட்டதாய்
அரைவேக்காடுகள்
எண்ணிக்கொண்டிருந்தால்
பாத்திரங்கள் ஆக முடியுமா.?

நாம்
களிமண்ணா.?
அரைவேக்காடா.?
அல்லது
பாத்திரங்களா.?

8 கருத்துகள்:

 1. அருமையாக இருக்கிறது. கருத்து ஆழமாக இருப்பதை போல கவிதையின் வார்த்தையை ஆழமாக பிரயோகித்து இருக்கலாம்.

  என் வாழ்த்துக்களும் ஆசியும்.

  பதிலளிநீக்கு
 2. அருமையாக இருக்கிறது. கருத்து ஆழமாக இருப்பதை போல...

  இ​தை​யே நான் வழி ​மொழிகி​றேன்....

  பதிலளிநீக்கு
 3. ஸ்வாமிஜி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

  அனானி...நன்றி

  பதிலளிநீக்கு
 4. \\குருவின் கையில்
  களிமண்ணாக
  சீடன் இருந்தால்தான்
  பொருளாக முடியும்\\

  சீடனாக நாம் எப்படி இருக்க வேண்டும் என சரியாகச் சொல்லிவிட்டீர்கள்

  வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 5. புரிந்து கொண்டது மிகவும் அருமையாக இருக்கிறது. குரு என்பது இங்கே புறக்காரணி மட்டுமே, ஒருதூண்டுதல், இக்னிஷன் அவ்வளவுதான்!

  எங்கே தேடுவது என்பதை அவர் நமக்கு ஒரு குறிப்புத்தான் தருகிறார். நாம் தான் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும். அப்படிச் செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியிலும், மிருகத்தன்மையின் மிச்ச சொச்சங்கள் ஒவ்வொன்றாகக் கழன்று கொள்ள, தெய்வீகம் கைகூடுகிறது. மனிதப்பிறவி, மிருகத்திற்கும் கடவுள்தன்மைக்கும் இடைப்பட்ட ஒன்று என்பதும், உருவத்தில் மனிதனாகவும், அறிவதிலும் உணர்வதிலும் மிருகமாகவே இருந்துவிடுவதில் இருந்து விடுபட்டு இருந்து தெய்வத்தன்மைக்கு உயரவேண்டும் என்பதும் புரிகிறது.

  தெய்வம் என்பது உணர்வு, விழிப்பு நிலையில் ஏற்படும் மாற்றமே!

  அதனால் தான், அவரவராக, இந்த மாற்றத்திற்குத் தயாராகிற வரை, உண்டு-இல்லை என்ற இரட்டைத்தன்மையோடேயே கடவுள் நம்பிக்கை அல்லது மறுப்பு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. நிகழ்காலத்தில்... உங்கள் வருகைக்கும் கருத்துக'கும் நன்றி...  கிருஷ்ணமூர்த்தி ஐயா உங்கள் வருகைக்கு நன்றி....

  //எங்கே தேடுவது என்பதை அவர் நமக்கு ஒரு குறிப்புத்தான் தருகிறார். நாம் தான் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்.//

  வாழைப்பழத்தைக் கொடுப்பார் சிலநேரம் உறித்தும் கொடுப்பார்.......

  பதிலளிநீக்கு
 7. Mr. Ismath

  This is wonderful meaning of life and we have to submit us to our Guru like a empty vessel which He has to fill it with full of wisdom of universe.

  பதிலளிநீக்கு
 8. arumayaana karuththu ghruvidam verum baanaiyaaka poonal thaan neer kondu varamudiyum nirai kudam ena ninaiththu poonal neer tharaiyil thaan bookum

  பதிலளிநீக்கு