சனி, அக்டோபர் 03, 2009

நவீன முஸ்லிம்கள்

கை பேசியில்
ஒலிக்கும்
பாங்கு

கவுண்டர் மெஷினில்
கணக்கெடுக்கும்
தஸ்பீஹ்கள்

உடல் தூய்மையுடன்
ஒதப்படவேண்டிய
திருக்குர்ஆனும்
ஹதீஸ்சும்
ஒதுவில்லாமல்
செருப்பு கால்களுடன்
கனிணியில்

நேருக்கு நேராய்
களைய வேண்டிய
கருத்து வேறுபாடுகள்
இணையத்தையும்
வலைப்பூக்களையும்
மேடைகளாக்கி
மோதிக்கொள்ளும்
தெளிவுபெறப் போகாத
பின்னூட்டங்கள்

மார்க்கப் பேணுதலுடன்
மார்க்கமாக இருக்க வேண்டிய
கன்னிப்பெண்கள்
சிலர்
பெற்றோர்களின்
கண்களில் மண்ணைத்தூவி
மாயமாகும்
எஸ்எம்எஸ் காதல்கள்

மலர்களை மாலைகளாய்
சுமந்து
மணமேடைக் கண்டது
திருமணங்கள்
சிலர்
மலர்களைவெறுத்து
மணங்களை அறுக்கும்
குறுகிய காலத்து
விவாகரத்துக்கள்

தர்ஹாக்களுக்கு
பெண்கள் செல்வது தடை
ஆனால்
தங்கள் தலைவர்களின்
அழைப்புக்கு
தலைவணங்கி
ஆண்களுடன்
அணிவகுத்துச் செல்கிறது
பெண்கள் படை

இல்லங்களை
தூய்மையாக்கி
உள்ளங்களையும்
தூய்மைப்படுத்தியது
மவ்லிது
இன்று
உள்ளங்களை
மாசுப்படுத்தி
இல்லங்களை
சூழ்ந்துக் கொண்டிருப்பது
முஸிபத்

மதஹப்புகளை
அமைத்து தந்தார்கள்
நான்கு
இமாம்கள்
ஆனால்
இல்லை என்று
மார்க்கம் போதிப்பதாய்
மதம் போதிக்கும்
இல்லையர்கள்

சாந்தியும்
சமாதானமுடையவர்களே
இஸ்லாமியர்கள்
இன்று
சந்திலும்
பொந்திலும்
வெடிக்கிறதென்று
பெற்றிருக்கும் பெயர்
தீவிரவாதிகள்


ஒரு தலைமையில்
கட்டுப்பட்டு
வாழ்ந்த ஊர்கள்
இன்று
பல ஜமாஅத்துக்களாக
தலைக்கொரு
பள்ளிகளாக
பிரிந்து நிற்கும்
தீண்டாமைகள்

இறைவன்போற்றும்
இறைத்தூதரை
தனக்கு நிகரென்று
இகழ்ந்துபேசும்
இஸ்லாமிய இலக்கணமறியாத
வெறுந்தலைகள்

ஆட்டுவதற்கும்
நீட்டுவதற்கும்
சண்டையிடுபவர்கள்
அறிவதற்கும்
புரிவதற்கும்
சட்டைபண்ணாத
இவர்கள்
நவீன முஸ்லிம்கள்

இஸ்லாமியர்களை
பார்த்துக் கொண்டு
இஸ்லாம்
வாளால் பரப்பப்பட்டதா
குண்டுகளால்
குழைக்கப்பட்டதா
குழப்பத்துடன்
மாற்று சமயத்து
சகோதரர்கள்…!

20 கருத்துகள்:

 1. பிழைகளைத் திருத்துக.
  (ஒலிக்கும்/செருப்பு/களைய/கணிணி).

  மேலும் தங்களின் கணிணி குரான் மற்றும் மவ்லுது கருத்துக்களில் எமக்கு உடன்பாடு இல்லை

  பதிலளிநீக்கு
 2. குரான் வாசிக்க குளிப்பு கடமையாகாமல் சுத்தமாக இருந்தால் போதும் ஒது அவசியமில்லை.

  மவ்லுது திரிக்கப்பட்ட கதைகளுடன் கூடிய இணை வைப்பதற்கு ஒப்பான ஒரு வழி பாடு

  பதிலளிநீக்கு
 3. உங்கள் வருகைக்கும் பிழைதிருத்தத்திற்கும் நன்றி....
  //மேலும் தங்களின் கணிணி குரான் மற்றும் மவ்லுது கருத்துக்களில் எமக்கு உடன்பாடு இல்லை//

  உடன்படாதவர்களைத்தான் நவீன முஸ்லிம் என்கிறேன்

  //மவ்லுது திரிக்கப்பட்ட கதைகளுடன் கூடிய இணை வைப்பதற்கு ஒப்பான ஒரு வழி பாடு//

  மவ்லிது வழிபாடல்ல தவறான புரிதல்....
  கருத்தைச் சொல்வதற்கு பெயரை மறைப்பதேன்....

  பதிலளிநீக்கு
 4. """"உடல் தூய்மையுடன்
  ஒதப்படவேண்டிய
  திருக்குர்ஆனும்
  ஹதீஸ்சும்
  ஒதுவில்லாமல்
  செறுப்பு கால்களுடன்
  கனிணியில்""""
  பதில்:
  நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெருமுனைகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் செருப்பை அணிந்து கொண்டு வீதிகளில் நடமாடிக்கொண்டுதான் குரான் வசனங்களை மக்கள் முன் எத்தி வைத்துள்ளார்கள்.இன்னும் சொல்லவேண்டுமென்றால் எல்லா நேரங்களிலும் குரானுடைய வசனங்களை திரும்ப திரும்ப மனதில் ஓதிப்பார்த்து கொண்டேதான் இருப்பார்களாம்(அந்த நேரங்களில் அவர் ஒதுவுடன் இருந்திருக்க வாய்ப்பில்லை).தொழுகையைத்தவிர மற்ற நேரங்களில் குரான் ஓதும்போதும் ஒதுவுடன் இருக்க வேண்டும் என்றிருந்தால் நபிகள் நாயகம்(ஸல்)சொல்லியிருப்பார்கள் சொல்வதோடுமட்டுமில்லாமல் தானும் செய்துகாட்டியிருப்பார்கள் பிறருக்கும் கடமையாக்கியிருப்பார்கள்.

  """"தர்ஹாக்களுக்கு
  பெண்கள் செல்வது தடை
  ஆனால்
  தங்கள் தலைவர்களின்
  அழைப்புக்கு
  தலைவணங்கி
  ஆண்களுடன்
  அணிவகுத்துச் செல்கிறது
  பெண்கள் படை""""""
  பதில்:
  மார்க்கம் ஆண்,பெண் இருவருக்கும் பொதுவான ஒன்றுதான்.தர்காவுக்கு பெண்களை மட்டும் போகவேண்டாமென சொல்லவில்லை ஆண்களையும் சேர்த்துதான்.தர்கா மார்க்கத்துக்கு புரம்பானது.அங்கே நடப்பதெல்லாம் ஷிர்க்.

  நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் பெண்களும் போரில் கலந்துகொண்டிருக்கிறார்கள்(அடிபட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது,உணவு சமைத்துகொடுப்பது போன்ற உதவிகளை பெண்கள் செய்து கொடுத்திருக்கிறார்கள்).இன்று பெண்கள் தங்கள் குழந்தைகளையும் தூக்கிகொண்டு போராட்டங்களில் ஈடுபடுவது தங்களுடைய நியாயமான உரிமைக்கும்,வாழ்வாதாரத்துக்குதான்.

  """"ஒரு தலைமையில்
  கட்டுப்பட்டு
  வாழ்ந்த ஊர்கள்
  இன்று
  பல ஜமாஅத்துக்களாக
  தலைக்கொரு
  பள்ளிகளாக
  பிரிந்து நிற்கும்
  தீண்டாமைகள்""""""""

  ஷியாக்களுக்கு பிறகு தீண்டாமை ஆரம்பித்து வைத்ததே தாங்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.4 மத்ஹபுகள் ஷாபி,ஹனபி,ஹம்பலி,மாலிக் என்று சொல்லி முஸ்லிம்களை பிரித்துவைத்தீர்கள்.இதில் ஏதாவது ஒன்றை பின்பற்றினால்தான் முஸ்லிம்களாக ஏற்றுகொண்டீர்கள்.
  நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டி தந்ததுமட்டும்தான் இஸ்லாம் மற்றதெல்லாம் பித்அத் என்று சொன்னவர்களையெல்லாம் ஊர்நீக்கம்,அடித்து உதைத்து துவம்சம் செய்தீரகள்.நபி வழியில் தொழ வருபவர்களையெல்லாம் பள்ளியில் வரவிடாமல் அடித்து துரத்துனீர்கள்.அன்றைக்கே அவர்கள் சொல்வதயெல்லாம் சரிதானா என்று ஆராய்ந்திருந்து குரானையும் ஹதீஸையும் மட்டும் ஏற்றிருந்திருந்தால் தவ்ஹீத் ஜமாத் உருவாகாமல் தடுத்திருந்திருக்கலாமல்லவா.

  பதிலளிநீக்கு
 5. //இன்னும் சொல்லவேண்டுமென்றால் எல்லா நேரங்களிலும் குரானுடைய வசனங்களை திரும்ப திரும்ப மனதில் ஓதிப்பார்த்து கொண்டேதான் இருப்பார்களாம்(அந்த நேரங்களில் அவர் ஒதுவுடன் இருந்திருக்க வாய்ப்பில்லை).//

  எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தின் அருட்கொடை அனைத்துமக்களுக்கும் முன் மாதிரி உமக்கு அவராகிவிட்டார்.....அவர்கள் ஒதுவுடன் இருந்திருக்கவாய்ப்பில்லை என்று கூறும் உமது வியூகம்....நபியைவிட உயர்ந்த அந்தஸ்தில் நீர் இருப்பதைக் காட்டுகிறது....உம்மைப்போன்றவர்களைத்தான் நவீன முஸ்லிம் என்கிறேன்....


  //இன்று பெண்கள் தங்கள் குழந்தைகளையும் தூக்கிகொண்டு போராட்டங்களில் ஈடுபடுவது தங்களுடைய நியாயமான உரிமைக்கும்இவாழ்வாதாரத்துக்குதான்.//

  வாழ்வாதரத்துக்காகவா...? உங்கள் தலைவர்களின் வசூல்வேட்டைக்காகவா என்று சென்று வந்தவர்களின் வாக்கு மூலம் கூறுகிறது....

  //4 மத்ஹபுகள் ஷாபிஇஹனபிஇஹம்பலிஇமாலிக் என்று சொல்லி முஸ்லிம்களை பிரித்துவைத்தீர்கள்.இதில் ஏதாவது ஒன்றை பின்பற்றினால்தான் முஸ்லிம்களாக ஏற்றுகொண்டீர்கள்.//

  இன்று என்ன நடக்கிறது 4 மத்ஹபுகளுடன் 5வது உங்களது லா மதஹபைத்தானே பின் பற்றுகிறீர்....
  முஸ்லிம்களை பிரித்துக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு அவப்பெயர்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பது நீங்கள்தானே...உம்மைப்போன்றவர்களைத்தான் நவீன முஸ்லிம் என்கிறேன்...!

  பதிலளிநீக்கு
 6. நான் சொல்ல நினைத்ததை நண்பர்கள் சொல்லிவிட்டார்கள்.தர்கா வழிபாட்டில் விருப்பம் உள்ளவரா நீங்கள்? வருத்தமாக இருக்கிறது.எல்லாம் ஓய்ந்த நேரத்தில் ஏனிந்த முகாரி?
  தீவிரவாதிகளாக யாரும் பிறப்பதுமில்லை.ஆசைப்படுவதுமில்லை.முஸ்லீம்கள் மீதான உலகம் தழுவிய அடக்குமுறைகளும்,வன்முறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.அறிவுஜீவிகள் புலம்பிகொண்டிருக்க,ஆத்திரப்படுபவர்கள் ஆயுதம் எடுக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 7. //நான் சொல்ல நினைத்ததை நண்பர்கள் சொல்லிவிட்டார்கள்.தர்கா வழிபாட்டில் விருப்பம் உள்ளவரா நீங்கள்? வருத்தமாக இருக்கிறது.எல்லாம் ஓய்ந்த நேரத்தில் ஏனிந்த முகாரி?
  தீவிரவாதிகளாக யாரும் பிறப்பதுமில்லை.ஆசைப்படுவதுமில்லை.முஸ்லீம்கள் மீதான உலகம் தழுவிய அடக்குமுறைகளும்,வன்முறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.அறிவுஜீவிகள் புலம்பிகொண்டிருக்க,ஆத்திரப்படுபவர்கள் ஆயுதம் எடுக்கிறார்கள்//

  வாங்க சகோதரரே....தர்ஹா வழிபாட்டுதளம் அல்ல....பலர் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள்....வழிபடுவதற்கு சில சரத்துகள் இருக்கிறது...மனதில் நிய்யத்வேண்டும் ,ஒழுசெய்யவேண்டும், கிப்லாவை முன்னோக்க வேண்டும் இதுதான் வழிபாடு ...
  செல்வபர்களுக்கு தெரியும் அங்கிருப்பது இறைவனல்ல மகான் என்று....அங்கு நடப்பது ஜியாரத்தே தவிர வணக்கவழிபாடு அல்ல....

  ஆத்திரப்படுவதினால் ஆயுதம் எடுக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள்...
  ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்ற பழமொழி உங்களுக்கு தெரியும்தானே...ஆயுதத்தை எடுப்பதற்கு பதிலாக அறிவை எடுங்கள்...

  பதிலளிநீக்கு
 8. SIR NEENGA YEATHA PATHI YEALUTHININGALO ATHU KODUKKURA COMMENTS LAYEA UNMAI AHIDUTCHI MIGA ARUMAI UNGAL YEALUTHU YOSIKKA VAITHTHATHU.. MIGA NANDRI BY HALITH

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொருவனும் தன் வழியிலே செயல்படுகிறான்.ஆனால் நேர்வழியில் உள்ளவர் யார் என்பதை உம் இரட்சகன் அறிவான் - குர்ஆன் 17-84

  பதிலளிநீக்கு
 10. மற்ற மதத்தவர்கள் சாதியின் பெயரால் அடித்துக் கொள்கிறார்கள் என்றால் முஸ்லிம்களாகிய நாம் இந்தக் கருத்து வேறுபாடுகளினால் மாறுபட்டு நிற்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. ஒற்றுமையாக இருப்போமானால் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற அவப்பெயரை களையலாம்.

  பதிலளிநீக்கு
 11. சகோதரர் தாவூது
  உசேன்அம்மா
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 12. சகோதரர் இஸ்மத் அவர்களே நீங்கள் இஸ்லாத்தை மூடர்களை போல் ஏற்காதீர்கள் ஆராய்ந்துபாருங்கள் எது சரி எது தவறு என்று இப்பொழுது ஆராய்வதர்க்கு அரபி புழமை தேவையில்லை உங்கள் மொழியிலும் நீங்கள் அறிந்த ஆங்கிலதிலும் எல்லாபுத்தகமும் கிடைகிரது வஸ்ஸலாம்

  பதிலளிநீக்கு
 13. சகோதரர் ராஜவம்சம் அவர்களே வாருங்கள்....உங்கள் வருகைக்கு நன்றி....குர்ஆனையும் ஹதீசையும் காண்பித்து பொருளைமாற்றி ஏமாற்றிக்கொண்டிருக்கும் கூட்டத்தை புரிந்துக் கொள்ளுங்கள்.வெலுத்ததெல்லாம் பால் அல்ல...எல்லாமொழிகளிலும் மொழிபெயர்ப்பு வந்திருந்தாலும் அறபு மொழியில் வந்த குர்ஆனின் பொருள் மொழிபெயர்ப்புகளில் இல்லை என்பதை நீங்கள் ஆய்வு செய்தால் விளங்கிக்கொள்வீர்கள்.

  பதிலளிநீக்கு
 14. நமக்குள் முதலில் ஒற்றுமை வேண்டும்.
  அப்போதுதான் இஸ்லாமல்லாதமக்களுக்கு இஸ்லாத்தைபற்றி முழுமையாக சொல்லிக்கொடுக்கமுடியும் நம்மைப்பார்த்து
  இதுவா இஸ்லாம் என மற்றவர்கள் இஸ்லாத்தை ஏளனம் செய்துவிடக்கூடாது.. [நஃவூதுபில்லாஹிமின்ஹா]

  பதிலளிநீக்கு
 15. சகோதரி மலிக்கா உங்கள் வருகைக்கு நன்றி....ஒற்றுமை என்பது நம் புரிதலில் இருக்கிறது....

  இஸ்லாமியர்களைப் பார்த்து இஸ்லாத்தை விளங்கமுடியாது விளங்கவும் கூடாது.
  விளக்கம் பெறவேண்டுமானால் குர்ஆன் ஹதீசைப் பாருங்கள்...பெரும்பாலோர் ஒரு கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக உண்மை பொய்யாகிவிடமுடியாது....

  பதிலளிநீக்கு
 16. //////எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தின் அருட்கொடை அனைத்துமக்களுக்கும் முன் மாதிரி உமக்கு அவராகிவிட்டார்////////

  எனது பதில்:
  எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தின் அருட்கொடை என்பதை நன்றாக உணர்ந்து வைத்துகொண்டு ஆனால் அவர் சொன்னதுக்கு மாற்றமாக நடந்துகொண்டிருக்கிறீர்களே?(கபுர் வணங்குவது(தர்ஹா),இறந்தவருக்கு ஜியாரத் செய்வது,மூன்றாம்-ஏழாம்-நாற்பது பாத்திஹா ஓதுவது,மவ்லிது(அதுவும் சினிமா பாட்டில் மெட்டெடுத்து)பாடுவது இதையெல்லாம் செய்துகொண்டு பிழைப்பு நடத்தும் இந்த கூட்டம்தான் நவீன முஸ்லிம்கள்.
  ***********************************************
  கபுர் வணங்குவது---நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்றைக்காவது தனக்கு முன் வாழ்ந்த நபிமார்களின் கபுர்களை வணங்கியிருக்கிறார்களா? அல்லது தான் இ
  றந்த பின் தனக்கு கபுர் எழுப்பி நம்மையெல்லாரையும் வணங்க சொன்னார்களா? பிறகு கபுரை ஏனெழுப்பி வணங்கி கொண்டிருகிறீர்கள்?(தர்ஹா-வைத்தான் சொல்கிறேன்)
  ********************************************
  ஜியாரத்---- நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில்தான் ஹதீஜா(ரலி),ஹம்ஸா(ரலி) போன்றோர்கள் இறந்தார்கள்.ஏன் இவர்களுக்கெல்லாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஜியாரத் செய்யவில்லை.சிந்திக்க மாட்டீர்களா?
  *********************************************
  3-ம்,7-ம்,40-ம் பாத்திஹா-----நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில்தான் ஹதீஜா(ரலி),ஹம்ஸா(ரலி) போன்றோர்கள் இறந்தார்கள்.ஏன் இவர்களுக்கெல்லாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 3-ம்,7-ம்,40-ம் பாத்திஹா ஓதவில்லை.விளங்க மாட்டீர்களா?(வீட்டில் யாராவது இறந்துவிட்டால் 3 நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க கூடாது என்று அண்ணலார் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்)
  ***********************************************
  மவ்லிது---- இதைப்பற்றி நான் சொல்லத்தேவையில்லையென நினைக்கிறேன்.
  ***************************************
  குறிப்பு:மேலே நான் குறிப்பிட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருக்கிறார்கள் என எந்த ஹதீஸ்லேயாவது ஆதாரத்தை காட்டுங்கள்
  ****************************************

  இறைவனுடைய திருத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை நான் தரம் தாழ்த்துவதாக இஸ்மத் குறிப்பிடுகிறார்.அப்படி நான் தரம் தாழ்த்தினால் இறைவன் என்னை மன்னிப்பானா? சரி விஷயத்துக்கு வருவோம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை "அவர்கள்" என்று குறிப்பிடாமல் "அவர்" என்று குறிப்பிட்டதால் நண்பர் இஸ்மத் அவர்கள், நான் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களை தாழ்த்திவிட்டேன் என்று கூருகிறார்.
  இதற்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.
  "அவர்" என்றால் ஒருமை
  "அவர்கள்" என்றால் பன்மை.அவர்கள் என்ற சொல்லை ஒருமைக்கும் பயன்படுத்தலாம் எப்போதென்றால்,ஒரு பெயரை குறிப்பிடும்பொழுது மரியாதைக்காக பயன்படுத்தலாம்.உதாரணம்:
  நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்களுக்கு சொன்னார்கள்.
  மூஸா(அலை) அவர்கள் இதை தன் சமுதாய மக்களுக்கு தடுத்திருக்கிறார்கள்.
  ஈஸா(அலை) அவர்கள் மக்கள் முன் அற்புதம் செய்துகாட்டினார்கள்.
  இப்பொழுது மேலே குறிப்பிட்ட வார்த்தைளுடன் மீண்டும் நான் "அவர்கள்" என்ற வார்த்தையை குறிப்பிட்டால் குழப்பம் ஏற்படும்.உதாரணம்:
  ஈஸா(அலை) அவர்கள் மக்கள் முன் அற்புதம் செய்துகாட்டினார்கள்.அவர்கள் வியந்ததை அவர்கள் கண்டார்கள்.
  மக்கள் வியந்ததை ஈஸா(அலை) அவர்கள் கண்டார்களா? அல்லது
  ஈஸா(அலை) அவர்கள் வியந்ததை மக்கள் கண்டார்களா? இப்படி குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.அதனால்தான் நான் அவர் என்ற வார்த்தையை குறிப்பிட்டேன்.இப்போழுது படியுங்கள் நன்றாக புரியும்
  """"""""ஈஸா(அலை) அவர்கள் மக்கள் முன் அற்புதம் செய்துகாட்டினார்கள்.அவர்கள் வியந்ததை அவர் கண்டார்."""""""""""

  அதனால்தான் நபிகள் நாயகம்(ஸல்) என்று குறிப்பிடும்போது அவர்கள் என்று சேர்த்தே குறிப்பிட்டேன்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை குறிப்பிடாத இடத்தில் "அவர்" என்று குறிப்பிட்டேன்.என்னுடைய மறுமொழியை நன்கு கவனித்தால் புரியும்.
  நண்பர் இஸ்மத் அவர்களே, உண்மையாகவே தமிழகராதியில் "அவர்" என்ற வார்த்தை மரியாதைக்குறைவான வார்த்தையா?என்பதை தெளிவுபடுத்தவும்.

  பதிலளிநீக்கு
 17. //ஒரு தலைமையில்
  கட்டுப்பட்டு
  வாழ்ந்த ஊர்கள்
  இன்று
  பல ஜமாஅத்துக்களாக
  தலைக்கொரு
  பள்ளிகளாக
  பிரிந்து நிற்கும்
  தீண்டாமைகள்//
  முஸ்லிம்களின் ஒற்றுமையை நச் என்று கவிதையில் விளம்பி இருக்கின்றீர்கள் சகோதரரே!தொடரட்டும் தங்கள் சமூக ஈடுபாடு.
  சமையம் இருக்கும் பொழுது என் பிளாக்கையும் பாருங்கள்.நன்றி.
  http://shadiqah.blogspot.com/

  பதிலளிநீக்கு
 18. இஸ்மத் நீங்கள் வேண்டுமானால் வாப்பா கலீல் அவுனை பின்பற்றுங்கள்..
  நீங்கள் செய்யும் சிர்க்கான காரியங்களுக்கு மறுமையில் பதில் சொல்லவேண்டும். அப்போது எந்த வாப்பாவும் சிபாரிசு செய்யமுடியாது. நீங்களும் மௌலூது சோற்றுக்கு அலையும் கூட்டமும் முதலில் முஸ்லிமாக இருங்கள். பின்னர் நவீன முஸ்லிமை பற்றி பேசலாம் சரியா..
  இனிமேல் இதுபோல் எழுதினால் அடுத்து அருமையான விளக்கம் தர தயாராக இருக்கிறேன்.. முஹைதீன் அப்துல் காதிர் ஜைலானி - அதிராம்பட்டினம்.

  பதிலளிநீக்கு
 19. வாப்பா கலீல் அவுனை பின்பற்ற உங்களை நான் கூப்பிடவில்லையே....சோற்றுக்குதானே நீங்களும் அலைகிறீர்கள்...நவீன முஸ்லீம் என்பதை நீங்கள் ஒன்றுக் கொள்கிறீர்கள்...எழுதுவதற்கு யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது...உங்களின் பெயரையே சொல்வதற்கு அஞ்சுகின்ற நீங்கள் மகான்களின் பெயரில் வாழ்கிறீர்கள்....மறுமையில் பார்க்கத்தானே போகிறேன்...

  பதிலளிநீக்கு