இரண்டு என்பதை
ஒன்றெனக்கூறுவது
ஏகத்துவம்...
தன்னையும்
படைத்தவனையும்
வேறுப்படுத்தி மாறுப்படுவது
துவைதம்...
துவைதவாதிகளே
தூயவனுக்கு
துணைவைப்பவர்கள்...
தன்னிலே சர்வத்தையும்
சர்வத்தில் தன்னையும்
காண்பதே அத்வைதம்...
அத்வைத அறிவு
இல்லையெனில்
ஆண்டவனைத் தரிசிக்க
முடியாது...
ஆன்மீகம் என்பது
ஆடையில் இல்லை
அது
அறிவில் தெளிவில்...
இறைதரிசனம் பெறுவதற்கு
நிறைவான குருத்தேவை
வழிக்காட்டல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை...
ஞானம் பெற
எளிமையான எண்ணமும்
தெளிந்த மனமும்
அறிந்துணர ஆர்வமும்
நம்மில் அதிகரித்தாலே
ஏகமும் ஏழ்மையும்
நம்மிலே எழிலுறும்...!
திருவாகி யாங்கும் யாவும்
இல்லையென்றிலாது
நிறைந்தும் விரிந்தும்
பரவியும் விரவியும்
எதுகையிலாது
அனைத்துமாய் நின்றியங்கும்
ஒன்றே ஏகம் என்றுரைத்தார்கள்
எம்குருநாதர்...!
ஒன்றெனக்கூறுவது
ஏகத்துவம்...
தன்னையும்
படைத்தவனையும்
வேறுப்படுத்தி மாறுப்படுவது
துவைதம்...
துவைதவாதிகளே
தூயவனுக்கு
துணைவைப்பவர்கள்...
தன்னிலே சர்வத்தையும்
சர்வத்தில் தன்னையும்
காண்பதே அத்வைதம்...
அத்வைத அறிவு
இல்லையெனில்
ஆண்டவனைத் தரிசிக்க
முடியாது...
ஆன்மீகம் என்பது
ஆடையில் இல்லை
அது
அறிவில் தெளிவில்...
இறைதரிசனம் பெறுவதற்கு
நிறைவான குருத்தேவை
வழிக்காட்டல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை...
ஞானம் பெற
எளிமையான எண்ணமும்
தெளிந்த மனமும்
அறிந்துணர ஆர்வமும்
நம்மில் அதிகரித்தாலே
ஏகமும் ஏழ்மையும்
நம்மிலே எழிலுறும்...!
திருவாகி யாங்கும் யாவும்
இல்லையென்றிலாது
நிறைந்தும் விரிந்தும்
பரவியும் விரவியும்
எதுகையிலாது
அனைத்துமாய் நின்றியங்கும்
ஒன்றே ஏகம் என்றுரைத்தார்கள்
எம்குருநாதர்...!
”துவைதவாதிகளே
பதிலளிநீக்குதூயவனுக்கு
துணைவைப்பவர்கள்...”
உண்மை... அதோடு இது என் கடவுள்; அது உன் கடவுள் என்பவர்களும்தான்.
ஏழ்மை=எளிமை
எதுகை=இரண்டு
என்ற பொருளில் எழுதியிருக்கிறீர்களா?
துவைதம் என்பது இரண்டுப்படுத்துவது.....
பதிலளிநீக்குஇஸ்லாம் ஏகத்துவம் என்ற கோட்பாட்டில் ஒன்றுப்படுத்துகிறது...
ஆதியும் அந்தமும் உள்ளேயும் வெளியேயும் காலமும் திசைகளும் பிடரியின் சமீபத்திலும் என்று இறைவன் தான் சூழ்ந்திருப்பதை திருமறையிலே அழகாக ஆழமாக கூறுகிறான்....
இஸ்லாமியர்களில் பலர் இறைவனை ஏழுவானங்களுக்கு மேலே வைத்து வணங்கிவருகிறார்கள்...அதைதான் துவைதம் என்கிறேன்...அதைதான் இணைவைத்தல் என்கிறேன்...
உங்கள் வருகைக்கு நன்றி....
ஆன்மீகம் என்பது
பதிலளிநீக்குஆடையில் இல்லை
அது
அறிவில் தெளிவில்...
SEEK KNOWLEDGE FROM CRADLE TO GRAVE.