வியாழன், செப்டம்பர் 24, 2009
நீச்சல்
நீச்சல்
ஒரு பயணம்
மனிதன்
தன்னை அறிவதற்கு
நீந்தவேண்டும்
நீத்துகின்றான்
கப்பலில்
விமானத்தில்
பொருள்தேடி.
கட்டுப்பாடில்லாமல்
நீந்திக் கொண்டிருந்தால்
கரையேறுவது எப்போது.?
சிலர்
காலம் கடந்து
கரையேறுகிறார்கள்
கறைகளோடு
வாழ்க்கை என்பது
பலருக்கு பொருளாக
இருக்கிறது
அதை
வெளியில் தேடுகிறார்கள்
பொருள்கள்
எண்ணத்தை
கறைபடுத்துகிறது
கறைகளை கழுகவேண்டும்
நீரில் அல்ல.
மனக்கறைகளை நீக்குவது
ஞானம்.
எழுத்து
கறைகளைக் கொண்டுதான்
மனக்கறைகளை போக்கவேண்டும்
தூய்மையை
தரிசிப்பதற்கு
தூய்மைவேண்டுமே.!
அழுக்குகள்
தூய்மையை
தரிசிக்க முடியுமா.?
கட்டுபாட்டுக்குள்
பறந்தால்தான் பட்டம்
அறுக்கப்படுவதெல்லாம்
குர்பானி அல்ல.
பறவைகள்
நீந்துவது
இறக்கைகளின்
கட்டுபாட்டில்
பூமி நீந்துவது
சூரியனின்
கட்டுப்பாட்டில்
விண்மீண்கள்
நீந்துவது
பிரபஞ்சக் கட்டுப்பாட்டில்
சுயத்தின் கட்டுப்பாட்டில்
நீந்தவேண்டிய மனிதன்
சுயநல கட்டுபாட்டில்
நீச்சலடிக்கிறான்…!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
//எழுத்து
பதிலளிநீக்குகறைகளைக் கொண்டுதான்
மனக்கறைகளை போக்கவேண்டும்//
நிச்சயமாக, நல்ல சிந்தனை
மலிக்கா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.......
பதிலளிநீக்குதூய்மையை
பதிலளிநீக்குதரிசிப்பதற்கு
தூய்மைவேண்டுமே.!
nalla karuthu!
- trichy syed
திருச்சி சையது ..... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!
பதிலளிநீக்குதூய்மையை
பதிலளிநீக்குதரிசிப்பதற்கு
தூய்மைவேண்டுமே.!
நல்ல வரிகள்