வெள்ளி, டிசம்பர் 25, 2009

இசையும் பாடலும்


இசை
ஜீவன்களை
இணங்க வைத்து
அசைக்க வைக்கும் ஆதி
குன் என்ற ஓசையில்தான்
இந்த
உலகத்தின் ஜோதி.

ஓசையில்தான்
மனிதனுக்கு பிறந்தது ஆசை
ஆசையினால்
மனிதன் மறந்துபோனான்
தன் சுய ஓசை.

"ஹு" என்ற ஓசையின் முடிவே
"ஓம்" என்ற நாதம்
சுரங்களை சுரக்க வைக்கும்
இவைகளில்
இல்லை பேதம்.

பிறப்பு இசைத்தால்
தாயிக்கு ஆதாரம்
பூக்கள் இசைத்தால்
தேனுன்னிகளுக்கு ஆகாரம்
பூகம்பம் இசைத்தால்
மனிதனுக்கு சேதாரம்.

காற்றின் இசையை யாரும்
கற்றுக் கொள்வதில்லை
கடலின்இசையை நாம்
கவனிப்பதில்லை
இயற்கையின் இசையை
நாம் இயற்றுவதில்லை
பசியின் இசையை நாம்
உணர்வதில்லை

இசை
மனிதனை வாழச் செய்கிறது
மனிதனுக்குள் வாழவும் செய்கிறது.!

11 கருத்துகள்:

 1. இசையை அருந்தி வாழ்ந்ததாம் சாதகப் பறவை- சங்க காலத்தில். மனிதனுக்கும் அவ்வண்ணம் வாழ முடிந்தால், சண்டை சச்சரவற்ற உலகில் மனிதன் இருப்பான்.

  பதிலளிநீக்கு
 2. கவிதை.நன்றாக இருக்கிறது...

  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 3. தமிழ்உதயம்
  கமலேஷ்
  குடுகுடுப்பை
  எம்.எம்.அப்துல்லா
  உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!

  பதிலளிநீக்கு
 4. //பிறப்பு இசைத்தால்
  தாயிக்கு ஆதாரம்
  பூக்கள் இசைத்தால்
  தேனுன்னிகளுக்கு ஆகாரம்
  பூகம்பம் இசைத்தால்
  மனிதனுக்கு சேதாரம்.//
  அருமையான வரிகள்.

  பதிலளிநீக்கு
 5. சகோதரிகள் ஸாதிகா, அனுஜா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!

  பதிலளிநீக்கு
 6. கவிதை அருமை.

  நேரம்கிடைக்கும்போது இதையும் பார்க்கவும்

  http://fmalikka.blogspot.com/

  பதிலளிநீக்கு
 7. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  பதிலளிநீக்கு
 8. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  பதிலளிநீக்கு