வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

தாஜ்மஹாலை கட்டியவன் காமப்பித்தன்


Tajmahal

ஷாஜகான்
முகலாய சாம்ராஜியத்திற்கு
முகவரி தந்த முதல்வன்



இவனை
காமப்பித்தன் என்கிறார்கள்
காமப்பித்தனுக்கு
காதல் எங்கிருந்து வந்தது?

காமர்கள்
கல்லரைகள் கட்டுவார்களா?
காமத்தை சுவைப்பதற்கு
பள்ளி அறைகள்தான்
கட்டுவார்கள்
ஆனால்

இவனும் கட்டினான்
தன் மனைவிக்காக
தாஜ்மஹால்,
டெல்லி செங்கோட்டை,
டெல்லி ஜூம்மா மஸ்ஜித்,
லாகூர் ஷாலீமார் தோட்டம்,
இவன் தந்தையின் கல்லரை
இன்னும் பல...

கட்டிடக்கலை பித்தனை
காமப்பித்தன் என்று
சில பைத்தியங்கள்
எழுதினார்கள் இவனின்
சரித்திரங்கள்

இவன்
பித்தனாகத்தான் வாழ்ந்தான்
ஆனால்
கட்டிடக்கலையின் நுட்பத்தில்
தன்னை
பைத்தியமாக்கிக் கொண்ட
பித்தன் இவன்

இவன் பெண்ணைக் கண்டு
காதலிக்கவில்லை
அவளை
தன் மனைவியாக்கிக் கொண்டு
காதலித்தவன்

பதிநான்கு செல்வங்களை
ஈன்ற இவன்
பதிஞானத்தையும்,
மதிஞானத்தையும்
பெற்றவன் என்பதை
அவன் கட்டிய கோட்டைகள்
இன்றும்
கடைவிரித்திருக்கிறது

இவன் கட்டிய
கல்லரைகள்
வெறும் கற்களை சுமந்து
நிற்கவில்லை
திருக் குர்ஆனின்
சொற்களை சுமந்து
நிற்கிறது

இருபத்து இரண்டு
ஆண்டுகளில் கட்டி
முடிசூடியது தாஜ்மஹால்
என்றால்
செங்கோட்டை,
பெரியப்பள்ளி
முடிப்பதற்கு எத்தனை ஆண்டுகள்?

தனது வாழ்க்கையை
கட்டிடக்கலைக்காவே
கொடுத்த பித்தனை
காமப்பித்தன் என்று பிதற்றுவது
சரியா?

காமப்பித்தன் கட்டிய
கல்லரைதான்
இன்று
உலக அதிசயமா?

இவனை
காமப்பித்தன் என்று
சொல்வதுதானே அதிசயம்!

இவன்
காமப்பித்தனாக இருந்திருந்தால்
இத்தனையும் செய்ய முடியுமா???????

வரலாற்று ஆசிரியர்களே!
உங்கள்
தரித்திரம் நீங்குவதற்கு
அவதூறான
சரித்திரங்களை
எழுதாதீர்கள்

சரித்திரங்கள்
சாவதில்லை
தாஜ்மஹாலைப்போல்
வாழ்ந்துக் கொண்டிருக்கும்.!

10 கருத்துகள்:

  1. நல்ல இருக்கு கவிதை . பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கு நன்றி பனித்துளி சங்கர்

    பதிலளிநீக்கு
  3. காமப் பித்தன் என்ற சொல் ஷாஜகானுக்கு சாலப் பொருந்தும் ! அது பிதற்றல் அல்ல !

    பதிலளிநீக்கு
  4. சமீபத்தில் புத்தகத்தில் படித்ததை அப்படியே கவிதையாக பார்க்கிறேன் ...

    மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
  5. வழிப்போக்கன்,
    கபிலன்,
    வாலுபையன்,
    வெறும்பய

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கவிதை அருமை.நம் மொழிக்கு வலு சேர்க்கும் வகையில் இன்னும் ஆழமான கருவை எதிர்பார்கிறேன்.அன்புடன் தம்பி

    பதிலளிநீக்கு