ஞாயிறு, செப்டம்பர் 06, 2009
உறவும் பிரிவும்
பஞ்சபூதங்களின்
அஞ்சுகைகள் தான்
படைத்தோனின் உறவுகள்…
படைத்தவனை தேடுவதற்கு
உறவுகளை பிரியும் துறவுகள்…
ஆதம் ஹவ்வா
ஆதி மனித உறவுகள்…
தடைச் செய்யப்பட்ட
சொர்க்கத்து கனியை
விடைத் தேடாமல்
சுவைத்ததால்
ஏக உறவில் ஏற்பட்டது
பிரிவுகள்…
நாம் என்ற முழுமை
உறவுகளுக்கு கொடுப்பது
உயிர்கள்…
ஆனால்
நான் என்ற சுயமை
மனதில்
களைகளாய் வளர்ப்பது
பிரிவுகள்…
எதிர்பார்ப்புகளின்
ஏக்கமே
உறவுபிரிவின்
தாக்கம்…
உயிர் பிரிந்தால்
மனம் அடைவது துக்கம்…
ஆனால்
உறவு பிரிந்தால்
உள்ளம் பெறுவது கலக்கம்
வாழ்க்கை வாகனத்தில்
பிரிவு இல்லையெனில்
உறவும் இல்லை…
ஆனால்
ஏக உள்ளமையில்
உறவு என்பதும்
பிரிவு என்பதும்
இல்லவே இல்லை…!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
பதிலளிநீக்குதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
//நாம் என்ற முழுமை
பதிலளிநீக்குஉறவுகளுக்கு கொடுப்பது
உயிர்கள்…
ஆனால்
நான் என்ற சுயமை
மனதில்
களைகளாய் வளர்ப்பது
பிரிவுகள்…//
உண்மையான உண்மை அண்ணாச்சி....
//ஆனால்
பதிலளிநீக்குஏக உள்ளமையில்
உறவு என்பதும்
பிரிவு என்பதும்
இல்லவே இல்லை//
இது உண்மையிலும் உண்மை.
கருத்துள்ள வரிகள் அனைத்தும்
உங்கள் வருகைக்கு நன்றி மலிக்கா.........
பதிலளிநீக்குராசா...உங்க வருகைக்கு நன்றி.......
பதிலளிநீக்கு