வியாழன், ஆகஸ்ட் 06, 2009

நான்...?


நான் சாதித்தவன்
நான் பாதித்தவன்
நான் திறமையானவன்
நான் உண்மையானவன்

நான் செய்தேன்
நான் கொடுத்தேன்
நான் வளர்த்தேன்
நான் எடுத்தேன்

இப்படி
நான் நான் என்று
வார்த்தைக்கு வார்த்தை
வரப்புக் கட்டுகின்றோமே
அந்த நான் யார்...?

அன்னைக்கு நான் மகன்
ஆசிரியருக்கு நான் மாணவன்
மனைவிக்கு நான் கணவன்
குழந்தைக்கு நான் தகப்பன்
உறவுக்கு தக்கவாறு
நாமம் மாறலாம்
நான் மாறுவதில்லை...

நான் என்பது யார்...?

நான் - நான்தான் என்போம்
நான் என்பது உடலல்ல
நான் என்பது உயிருமல்ல...

உடலுக்கும் உயிருக்கும்
உறவாய் இருப்பது ஆன்மா
உள்ளத்தில் உறைந்திருப்பது
அந்தராத்துமா...

பொருளறையிலிருந்து
புறப்பட்டு
கருவறையில் நுழைந்தோம்

தாம் யாரென்ற சிந்தனை
நம்மில் எழுந்தாலே
நாம் பாதி ஞானி
அதை விளங்கினாலே
பதிஞானி...

நான் என்பது பிரபஞ்சம்
ஐம்பூதங்களும்
அதில் தஞ்சம்
இதில் பெறவேண்டும் விஞ்ஞம்

ஜடத்தை வைத்து
நானை மட்டுப்படுத்துவதால்
மனிதம் மரணிக்கிறது
அநீதம் பிறக்கிறது...

நானை விளங்கி
நாம் வாழ்ந்தால்
நான் உனக்கு சகோதரன்
நீ எனக்கு சகோதரன்...!

11 கருத்துகள்:

  1. நானை நாணில் ஏற்றி நம் இதயத்தை நோக்கி எய்திருக்கிறார் கவிஞர் பிரித்து பார்ததால் பேதம், சேர்த்துப் பார்த்தால் ஞானம்.

    ராஜா கமால்

    பதிலளிநீக்கு
  2. நானை விளங்கி
    நாம் வாழ்ந்தால்
    நான் உனக்கு சகோதரன்
    நீ எனக்கு சகோதரன்...! ]] அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான அர்த்தம் நிறைந்த வரிகள்.

    பதிலளிநீக்கு
  4. அனைத்து 'நான்'களையும் அழகாக,அருமையாக வரிசைப்படுத்தியுள்ளீர்கள்.

    //நானை விளங்கி
    நாம் வாழ்ந்தால்
    நான் உனக்கு சகோதரன்
    நீ எனக்கு சகோதரன்...!//

    உள்ளம் கவர்ந்த உயர்ந்த உண்மை வார்த்தைகள் சகோதரரே !

    பதிலளிநீக்கு
  5. //நானை விளங்கி
    நாம் வாழ்ந்தால்
    நான் உனக்கு சகோதரன்
    நீ எனக்கு சகோதரன்...! //
    நானை விலக்கி
    நாம் வாழ்ந்தால்
    நாம்....
    நல்ல மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  6. பாசமிக்க பதிவர்களான...
    தமிழ்.சரவணன், ராஜாகமால், நட்புடன் ஜமால், அக்பர், துபாய் ராஜா, திகழ்மிளிர், நிகழ்காழத்தில், சுல்தான்

    உங்களின் அனுசரிக்கு மிக்க நன்றி...!

    பதிலளிநீக்கு
  7. சிலவகையான விசயங்களுக்கு பெரிதான அர்த்தம் ஏதும் இருப்பதில்லை என்பதை மனித மனம் புரிந்து கொள்வதில்லை இந்த நானும் அந்த வகைதான்.
    அருமையான கருத்துகளுடன் கவிதை இஸ்மத் அவர்களே!

    பதிலளிநீக்கு