திங்கள், ஜூலை 27, 2009

ஆறாவது அறிவு
இறைவன்
பேரறிவாளன்
இயற்கை பேரறிவின்
பெருமதி
அறிவே இந்த அகிலத்தின்
வெகுமதி…

அறிவின்றி அணுவும்
அசைவதில்லை
அறிவில்லா உயிரினங்கள்
ஏதுமில்லை
அறிவில்லாமல் உயிரினங்கள்
உருவாவதுமில்லை...

ஆக்கமும் அழிவும்
அறிவின் வெளிப்பாடு
ஆதியும் அந்தமும்
பேரறிவாளனின்
திட்டப்பாடு...

உயிரினங்களில்
மனிதன் ஆறாவது அறிவில்
விளைகிறான்
விளையக்கூடிய மனிதர்களெல்லாம்
ஆறாவது அறிவில்
கனிகளாவதில்லை…

பேதங்களையும்
வாதங்களையும்
களையாமல்
அவனிடமுள்ள திரைகள்
விலகுவதில்லை...

தன்னை
நான் என்று பார்ப்பவன்
நானில்
தன்னை பார்ப்பதில்லை
தன்னையும் விண்ணையும்
காண்பதுபோல்
அனைத்தில் தன்னையும்
தன்னில் அனைத்தையும்
காணும்போது
ஏக உள்ளமையில்
எஞ்சாமைக் கொள்கிறான்
அவன்
தானே தன்னில் தானாகும் போதுதான்
பரிபூரண அறிவில் பரிணமிக்கின்றான்...

விஞ்ஞானிகள்
அறிவின் விளிம்பில்
வியக்கிறார்கள்
மெய்ஞ்ஞானியோ
அறிவின் பூரணத்தில்
பூக்கிறார்கள்...

மனிதன் மனிதனாக
வாழும்போது தான்
ஆறாவது அறிவு அவனில்
அடியீடாகிறது
அதுவரை அவன்
மொழியும் மிருகமே...!

3 கருத்துகள்:

 1. கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

  நன்றி...

  பதிலளிநீக்கு
 2. இனிய தோழருக்கு…


  பலசமயங்களில் மிருகமாய் வாழும் மனிதர்களுக்கு ஆண்டவன் ஆறாவது அறிவை கொடுத்திருக்கிறான் என்பதை நினைவூட்ட வருகிறது உங்களின் ஆறாவது அறிவு கட்டுரை.


  சிநேகத்துடன்…

  திருச்சி சையது

  பதிலளிநீக்கு