புதன், செப்டம்பர் 24, 2008

11.காதல்

காதல்…

ஆன்மாவின்
ஆரம்பம் காதல்
காதல் விளையாத உள்ளத்தில்
உயிரில்லை…

தடுக்கப்பட்ட கனியை
ஆதம் ஹவ்வா
உண்டதின் நோக்கம்
காதல்…

பேரரசுகளின்
பெருமகன்கள்
காதல் பேதமையில்
கவிழ்ந்த கதைகள்
காதல்…

ஆணும் பெண்ணும்
உடலோடு உடல்
நேசிப்பில் அல்ல
காதல்…

காதல்
ஆடையிழந்த அலங்காரம்
அணிபவர்களுக்கு
அது அநுராகம்…

காதல் அரும்பும் நெஞ்சத்தில்
துன்பங்களும் துயரங்களும்
போய் விடும் தூரம்…

காதல் தூய்மையானது
தூசிகள் நிறைந்தால்
தூரல் ஆவது காதல் அல்ல
காதலர்கள்…

தேகத்தில் மட்டுப்பட்டு
மோகனத்தில் வளர்ந்து
வேகத்தில் புரிந்த காதல்
சோகத்தில் முடியுரை…

மதுவில் உள்ள மயக்கம்
காதலில் அது நிலைக்கும்
மருள் இல்லா காதலே
மலரும் காதல்…

வேற்றுமைகளைக் கலைந்து
ஒற்றுமைகளில் ஒன்றித்தலே
ஏகத்துவ காதல்…

மகான்கள்
மாட்சிமை மிக்க
இறை மீது கொண்ட காதல்
நிறைவாய் நிலைத்திடும்
நித்தியக் காதல்…

நேசமிக்க நெஞ்சங்களை
அன்புமிக்க உள்ளங்களை
இன்மையின் இதயங்களை
இறைவன் கொள்கிறான்
சத்தியக் காதல்…

தன்னையன்றி
அனைத்திலும் கொள்ளுவது
சிற்றின்பக் காதல்
தன்னில் கொள்வதே
பேரின்பக் காதல்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக