புதன், செப்டம்பர் 24, 2008

19.கோபம்

ஆறுவது சினம்


கோபம்
கொடிய நோய்…

இந்த நோய்
இல்லாத மனிதர்களை
காண்பது பொய்…

சினத்தால்
சினேகிதம்
சிதைந்து போவது
மெய்…

கோபம்
வாழ்கையின்
வழிதடத்தை
மாற்றி விடும்
கோணம்…

கருத்துக்கள்
கருவாகி
கருநெறியில்
கருச் சிதைவு…

நான் நீ என்ற
போட்டிகளில்
பொடிகளாய் போகும்
பொறுமை…

யாருக்காகவோ
வாழ்க்கையை
தொலைத்து விட்டு
தனக்காக
வாழ்பவர்களை
தவிக்க விட்டு
தலையிறக்கும்
வெறுமை…

மதச் சண்டைகளும்
மதில் சண்டைகளும்
மந்தனமில்லாத
மமதையில்…
அரசியலும்
அதிகாரங்களும்
சினம் என்ற
அறுவடையில்…

சின்ன சின்ன
சினத்தினால்
சிதறிவிடும்
சிந்தைகள்…

கட்டுபாடில்லாத
கனற்சியில்
கலைந்திடும்
கடைசி நிமிட
சாதனைகள்…

கோபம்
குடியிருக்கும்
இல்லத்திலும்
உள்ளத்திலும்
விடைபெற்று விடும்
அமைதி…

இரத்த கொதிப்பும்
பித்த திலைப்பும்
கோபத்தின்
வருமானங்கள்…

கடவுளை இழப்பது
கர்வம்
நண்பனை இழப்பது
பொறாமை
தன்னை இழப்பது
கோபம்
இது முதுமொழி…

கோபம்
கொளுந்து விட்டு
எரியும் பொழுது
நீரினில்
நீராடினால்
நிவர்த்தியாகும்.
இது
நிவாரணம்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக