புதன், செப்டம்பர் 24, 2008

25.தொப்பி

தொப்பி …

தொப்பி போட்ட
இஸ்லாமியர்
பள்ளிவாசலுக்கு
தொழச் சென்றார்…

பின் வரிசையில்
சிறுவர்கள்
தலையில் தொப்பி யோடு …

முன் வரிசைக்கும்
பின் வரிசைக்கும்
இடையில்
வெறும் தலையுடன்
இளைஞர்கள்…

அமைதியான
தொழுகைக்கிடையில்
ஹனபிபள்ளியில்
ஆமீன் - என்ற
ஆவேசக் குரல்கள்…

சலனமற்ற இறை
சந்திப்பில்
சிலரால்
சிதறும் சிந்தனைகள்…

நிலை நாட்டப்பட
வேண்டிய தொழுகை
நிலை குலைகிறது…

தொப்பி போடுவது
பர்ளா ? சுன்னத்தா ?

சிலரது ஆத்திரக்
கணைகள்…

இஸ்லாம்
அறிவுப்பூர்வமான
மார்க்கம்-என்று
மேடையில்
பேசினால் மட்டும்
போதாது…

தலைமுடி உதிர்வை
தடுக்கும் கவசம்
தொப்பி…

அதை அணிவதால்
விளைவது
பள்ளித் தூய்மை…

இதை
ஏன் இவர்கள்
மறுக்கிறார்கள்
அல்லது
மறைக்கிறார்கள்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக