புதன், செப்டம்பர் 24, 2008

12.அன்பு

அன்பு…

உலகத்தின்
உயிர் நாடியும்
உயிரினங்களின்
உதிப்பும்
அன்பின் வெளிப்பாடு…

அன்னை
அன்பை பொழியும்
அட்சய பாத்திரம்
தொப்புள் கொடி உறவே
அன்பின்
ஆரம்ப பாடச்சாலை…

கணவன் மனைவி உறவில்
அன்பும்
அன்னியோன்னியமும்
இல்லையெனில்
ஆயுள் வரையில்
வாழ்க்கை இல்லை…

அன்பில்லா செயலில்
உறவுவில்லை
உணர்வில்லை
உயிருமில்லை…

அறிந்தவருக்கும்
அறியாதவருக்கும்
தூய்மையான அன்பினை
வழங்கினால்
இதயங்களில் கட்டப்படும்
இலக்கண தாஜ்மஹால்…

வயோதிகர்களுக்கு
வயிறு நிரம்ப உணவைவிட
மனம் நிறைந்த அன்பே
பசியைப்போக்கி
அவர்களின்
வாழ்வை வளமாக்கும்
வரம் தரும்
அன்புமஹால்…

மதங்களும் மார்க்கங்களும்
மனிதர்களுக்கு
போதிப்பது அன்பு
அதில்
வாழ்ந்தவர்களுக்கு
அகிலம் கொடுத்திருப்பது
அடையாளங்கள்…

அன்பை மட்டுமே
வாழ்க்கையாக்கி வாழும்
அன்னைகள்
அன்பினால் கட்டினார்கள்
அனாதை இல்லங்கள்…

அன்புடன் பழகினால்
மிருகங்களும் கூட
மனிதர்களின்
நண்பர்கள்…

அன்பு குடியிருக்குமிடத்தில்
ஆண்டவன் இருப்பான்
என்பது
அன்பு மொழி…

நோயாளிகளைக் கண்டு
அன்போடு
நலன் விசாரிப்பது
நன்மை பயக்கும் என்பது
அண்ணல் நபிகள் இயம்பிய
அழகிய பாத்தியம்…

பிரிந்து போன உறவுகளை
பரிவும் பாசத்திலும்
மலரச்செய்யும் அன்பில்
மருளிலில்லை…

அன்பு அடங்கும் போது
ஆணவமும் அதிகாரமும்
தூக்கும் தலை
அமைதி இழந்திடும் கலை
அன்புக்கு இல்லை விலை…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக