கடமைகள்…
கடமையைச் செய்
பலனை
எதிர்பார்க்காதே
இது
வேதங்களில்…
நன்மை செய்தால்
சுவர்க்கம்
தீமை செய்தால்
நரகம்
இறைவன் அமைத்த
தேர்தல் களங்கள்…
படைப்புகளுக்கும்
படைத்தவனுக்கும்
இடையில்
கடமையின்
கணக்குகள்…
கடமைகளை
செய்து விட்டு
பலனுக்காக
காத்திருப்பது
மழையைத் தேடும்
பயிர்கள்…
எதிர்பார்ப்புகளோடு
கடமைகளை
கரை சேர்ப்பதால்
மனங்கள் சுமப்பது
பொதிகள்…
பால் கொடுத்தவளுக்கு
தோள் கொடுக்க
தோணுதலின்
விடை தேடும்
விடுகதைகள்…
எதிர்பார்புகளின்
பாதிப்புகளால்
உறவுகளுக்கு
கொடுக்கப்படும்
விடுமுறைகள்…
கடமைகள்
சிலருக்கு சுயநலம்
அதனால்
வளர்ந்து
முதிர்ச்சியடைகிறது
முதியோர்
இல்லங்கள்…
தவறிப் போகும்
கடமைகளால்
தடுமாறும்
உள்ளங்கள்…
சிலர்
கடமைகளில்
கண்கள் …
சில
சமயங்களில்
மூடப்படுகிறது
அவர்களது
இமைகள்…
இன்று
நாம் விதைப்பது
நாளை நமது
அறுவடையில்…
தான் என்ற
சுயத்தினை
தேடும் கடமையே
சந்தேகங்களின்
சந்திப்பு தரும்
விடைகள்…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக