புதன், செப்டம்பர் 24, 2008

24.வரலாறு

வரலாறு…

நிகழ்வுகளின்
உதயமே
சரித்திரங்கள்…

உதிர்ந்து போன
இலைகளுக்கும்
உதிரம் சிந்திய
உத்தமர்களுக்கும்
உளமையான
சரிதைகள்…

வாசிக்கப்படும்
வரலாறுகள்
சிலரது
வஞ்சனைக்குள்…

கற்பனைகளுக்கும்
காட்சிகளுக்கும்
இடையில்
கட்டுக்கதைகள்
இது
தொலைகாட்சிகளில்
தொலைத்து விட்ட
நேரங்களில்…

மார்க்கம் இன்று
தர்க்கங்களுக்கும்
தடுத்தாளுதல்களுக்கும்
மத்தியில்…
சிலரால்
அமைக்கப்பட்டிருப்பது
தளங்கள்…

சஹாபாக்களும்
இமாம்களும்
பிழிந்து தந்த
சாராம்சத்தினை
மீண்டும்
பழத்திற்குள் செலுத்தும்
முயற்ச்சிகள்…

‘ மதஹப்புகள்’
அவசியமா ?
குறுக்கு
விசாரணைகளோடு
குருடர்கள்…

நான்கு
மதஹப்புகளுக் கிடையில்
அஞ்சாவது
நாத்திகம் போல்…

தீண்டாமைகள்
இன்னும்
வாழ்ந்துக்
கொண்டிருக்கிறது
‘லயீப்’ என்னும்
பல ஹதீஸ்கள்
தீண்டாமைகளோடு…
அவ்லியாகடகளும்

அன்பியாக்களும்
அச்சமும்இதுக்கமும்
படுமளவு
அஞ்ஞானிகள்…

சத்தியங்கள்
இப்போது
சில்லரை கடைகளில்
மலிவான
விற்பனையில்…

ஒற்றுமை என்னும்
கயிற்றை
விட்டு விட்டு…

வேற்றுமையின்
வேர்களை
ஆழத்தோண்டி
புதைக்கப்படும்
பரிதாபங்கள்…

இவர்களுக்கு
இடையில்
மாற்றான்
தோட்டத்து மல்லிகைகளில்
சிலர்…

இஸ்லாம்
வாளால்; புறப்பட்டது
என்று
முடிசூடும்
முன்னுரைகள்…

வாளால் புறப்படுவது
மார்க்கமல்ல
வாளால் தற்காத்துக்
கொண்டதே
மெய்யுரைகள்…

இவைகள்
அனைத்தும்
ஆரோக்கிய
வளர்ச்சிகளுக்கு
அப்பால்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக