புதன், செப்டம்பர் 24, 2008

18.ஆயிரத்தி ஒரு ரூபாய் மணமகளுக்கு

ஆயிரத்தி ஓரு ரூபாய் மணமகளுக்கு…

வாழ்க்கை ஒப்பந்தங்கள்
இன்று
வியாபார சந்தைகளாக…

‘மஹர்;’ கொடுத்து
மணக்கவேண்டிய நங்கைகள்
பணமும்
தங்கநகைக் கடைகளுமாய்
நகர்வலம்…

அன்று
பெண் சிசுக்கள்
கருவறையின்
ஈரம் காய்வதற்கு முன்
மண்ணறைக்குள்…

இன்று
கன்னிப்பெண்கள்
மணவறை காண
வாழ்க்கையின் நிர்ணயம்
சில்லரைக்குள்…

வசதியற்றவர்கள்
வயதை கடக்கும்
தன் பெண்ணுக்கு
மாப்பிள்ளை சந்தையில்
பேரம் பேச முடியாத
ஊமைகள்…

பெற்றோர்களின்
சொல்லைத் தட்டும்
சில இளைஞர்கள்
திருமண விசயத்தில் மட்டும்
தீர்க்கமாய் தலைக் குனியும்
நாணிகள்…

திருமணத்தின் போது
தீவிரமாய் வாசிக்கப்படும்
ஆயிரத்தி ஒரு ரூபாய் மணமகளுக்கு…

தீன் முறைப்படி
திருமணம் என்று
அச்சடிக்கப்படும்
அட்டைகள் பேசும்
ஆனால்
ஆயிரத்து ஒன்றை
அளித்துவிட்டு
பல
ஆயிரங்களை பறிக்கும்
அடுக்கு வட்டிகள்…

கொடுக்கல் வாங்கலில்
குறை நிறைந்தால்
மணமகள் வாழ்க்கையில்
விழுவது திரைகள்…

‘ஷரியத்’ என்னும்
சட்டதிட்டத்தை
செயற்படுத்தாதோர்
சமுதாயத்தின்
சலனத்துக் கஞ்சுதல்கள்…

பெண் வீட்டாரை
நிர்பந்திக்காத நிக்காஹ்வும்
ஏழை வீட்டு பெண்ணை மணக்கும்
மனங்களும்
ஏகனின் அருளுக்கு
ஏற்றமுடையவர்கள்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக