குத்புஸஸமான் ஷம்சுல் வுஜூது ஜமாலிய்யா
அஸ்ஸைய்யித் கலீல் அவுன் மௌலானா
அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் அருளிய
துதிப்பா
(வெண்பா}
1. நம் பிள்ளை இஸ்மத்து நல்லதொரு நூலதனை
செம்மையுடன் யாத்துள்ளார் சீர்பெருக-வம்பரும்
மெய்யறிந்து வாழ்திடல் மேன்னை பயக்குமே
பொய்யொழிந் தென்றுமே போம்.
2. சீர்குர்ஆன் பற்றியுந் தேனபிகள் யாரெனவும்
பேர்ஞானம் நிம்மதியும் பேறுறும்-நேர்சபையு(ம்)
மற்றும் பலவெல்லாம் மாமதியோ ராய்ந்திடவே
முற்று முரைத்தார் முதல்.
3. மருளில் மலர்கள் மணமிக்க நற்பூ
இருபதோ டைந்து மெழிலாய்-உருவெடுத்
துள்ளதிந் நூலி லுணரப்பெருந்துணையா
யுள்ளத்து ளென்று முறும்.
(வேறு)
பள்ளிக்குள்ளே பாதகஞ் செய்து
எள்ளித் திரிவ ரிழிவு செய்வார்
தலையிற் றொப்பி தரியார் தரியார்
தலையில் லாதார் தகையில் லாதார்
எனவிதிற் பலநல் விளக்கமு முண்டு
மனநிறை நபியை வாழ்த்தி டாதே
எனவுங் கூறி யினிதே யரசியல்
முனைவனை வாழ்த்துந் தன்னறி வில்லார்
எனவும் விரிவுற வெழிலா யியம்பும்
கனிவுறு சொல்லதிற் காண்டற் கியலும்
இனிதுற விந்நூ லிசைவுற நானே
மனமா யென்றும் வாழ்த்து கின்றேனே.
-ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச்.மௌலானா
குறிப்பு. தரியார்.-பகைவர்
தரியார் --அணியமாட்டார்
முனைவன்--தலைவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக