புதன், செப்டம்பர் 24, 2008

16.பிரிவு

பிரிவு…

கருவறையை
பிரிந்த பொழுது
நான் அழுதேன்…
பள்ளிக்கு அனுப்பி விட்டு
தாய் அழுதாள்…

கல்லூரி படிப்பு முடிந்து
நாங்கள் அழுதோம்…

காதலை பிரிந்து
காதலர்கள் அழுகிறார்கள்…

கணவனை பிரியும் பொழுது
மனைவி அழுகிறாள்…

உயிர் பிரியும் பொழுது
உறவு அழுகிறது…

பிரிவு என்பது
காலமும் தூரமும்
செய்த நிர்ணயம்…

எண்ணத்திலும்
உள்ளத்திலும்
நினைவு
வாழுகின்ற பொழுது
எது பிரிந்தது… ?

உடல்
காற்று ஊதப்பட்ட
பந்து- அது
ஆன்மாவால்
அலங்கரித்துக்-
கொண்டிருக்கிறது.

எங்கிருந்து
புறப்பட்டோமோ
அங்கே
சேர வேண்டுமென்பது
நியதி…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக