அது எதுவாக இருந்தாலும்
துணிக்கடையில்
துணிவாங்கும் போது
துவைத்தால்
சாயம் போகுமா
சுருங்குமா
தரமா உரமா
என்ற
ஆராய்ச்சிகள்…
காய்கறி கடையில்
சொத்தையா
முத்தலா
அழுகலா
இளசலா
போன்ற
தேர்வுகள்…
பெண் பார்க்கும் போது
அழகு
படிப்பு
குணம் மணம்
குடும்பப் பாங்கு
நடை உடை
நளினம்
வசதி அந்தஸ்த்து
அக்கம் பக்கத்தில்
விசாரணைகள்…
வீடு கட்டும் போது
சாஸ்திரம்
சம்பரதாயம்
காற்றோட்டம்
நீரோட்டம்
வாஸ்து
வாசல்
யோசணைகள்…
படித்து விட்டு
எந்த வேலைக்கு
போகுவது
உள் நாடா
வெளி நாடா
எதில் அதிகம் சம்பாதிக்கலாம்
அலுவலகங்களின்
நிலவரம்
ஜாதகம்
அனைத்தையும்
அலசல்கள்…
இப்படி
எல்லா விசயங்களிலும்
அலசி ஆராய்ந்து
விசாரணைகள் செய்து
யோசனைகள் செய்து
வாழும் நமக்கு
இறைவனுடைய
விசயத்தில் மட்டும்
அவன்
கல்லாக இருந்தால் என்ன
புல்லாக இருந்தால் என்ன
கருப்பாக இருந்தால் என்ன
சிவப்பாக இருந்தால் என்ன
உருவம் இருந்தால் என்ன
அருவமாக இருந்தால் என்ன..
எனக்கு இல்லை கவலை
என்பது போல்
நம்பி வாழ்வது
நன்நம்பிக்கையா
மூட நம்பிக்கையா…?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக