புதன், செப்டம்பர் 24, 2008

14.அரசியல்

அரசியல்…

அரசியலில்
நேர்மையான தலைவர்கள்
வாக்கு மாறாத
அமைச்சர்கள்
மக்கள் சேவையே
தங்கள்
தேவையெனக் கருதி
அயராது உழைப்பவர்கள்
அரசு உடமைகளை
தங்கள்
சுயநலத்திற்கு
உபயோகிக்காதவர்கள்
பொது நலமே
அவர்களின் பொழுதுபோக்கு
இவையெல்லாம்
நான் படித்த சரித்திரத்தில்…

கடமைத் தெரியாத
கண்ணியம் விளங்காத
கட்டுப்பாடில்லாத
அரசியல் வாதிகளுக்கு
மத்தியில்…

கொலைகள் கொள்ளைகள்
கற்பளிப்பில் தேர்ச்சி
இவையே
இன்றையஅரசியலின்
வளர்ச்சி…

அரசியல் என்பது
சூதாட்டம்
ஆட்சிமுறை அமைப்பதற்கு
ஆடும் பித்தலாட்டம்…

ஆட்சியாளர்கள்
தவறுகள் செய்யாமலிருக்க
மக்களின் பாதைகள்
நேர்மைகளில்…

தலைவர்களையும்
தகுதியானவர்களையும்
தேர்ந்தெடுக்கும் பொறுப்புகள்
நம் கைகளில்…

கைகள்
நம்மிடம் இருக்கும் வரை
அவர்களின் தலையெழுத்து
நம் தூரிகைகளில்…

நல்லாட்சி நல்குவதற்கு
மக்கள் சிந்திப்பவர்களாக
அல்லது
ஆட்சியாளர்கள்
மக்களைச் சிந்திப்பவர்களாக
இருத்தலே சீர்மை…

கலீபாஹக்களின் ஆட்சிமுறை
இந்தியாவில்
மலரவேண்டும் என்பது
மகாத்மா காந்தியின்
ஒருமைப்பாடு…

இருண்டகாலங்த்தில்
வெளிச்ச
அரசியல் தந்தார்கள்
அபுபக்கர் சித்தீக் (ரலி)…

வாழ்க்கையின் தேவைக்கு
வணிகம் செய்தார்
ஆட்சிதலைவராக ஆனபின்னும்
வணிகமே …

தோளில் துணிச் சுமை
வெற்றுக்காலுடன்
வீதியில் வந்தபோது
ஒரு குரல்…

நாடாளும் மனிதர்
வீதியில் வணிகராய்
வந்தால்
நிர்வாகம் யார் கையில்…?

இந்த குரலுக்கு
சொந்தக்காரர்
கலீபாஹ் உமர் (ரலி)…

வணிகம் செய்கிறேன்
வயிற்றுப் பசிக்கு
என் குடும்பம் பொறுப்பை
யார் ஏற்பது
பதிலுரைத்தார்கள்…

இவைகள்
கற்பனை அல்ல
நிகழ்ந்த காலத்தின்
சத்தியம்…

இவை
படிக்க சுவைக்கும்
நடைமுறைப்படுத்த..?

முயன்றால்
முயற்ச்சிகள்
முற்றுப்பெறுவதில்லை…

இன்றைய தலைவர்களின்
குடும்பங்கள் வளர்ச்சி
அரேபிய நாட்டு
ஆட்சியாளர்களைப்போல்…

தன்னை உணர்ந்த
தலைவனே
மக்கள் தேவையினை
தீர்க்கும் சீலன்…

கல்லூரிகளில்
நுழைவுத் தேர்வு
எழுதுவதைப் போல்
ஆட்சி பீடங்களில்
அமருபவர்கள்
நல்லாட்சி தந்தவர்களின்
வாழ்க்கையை படித்து
எழுதவேண்டும் தேர்வு…

தேர்வில் தேர்ச்சிமட்டுமல்ல
வாழவும் வேண்டும்
தவறுபவர்கள்
ஆட்சியிலிருந்து விலக்கி
கொடுக்க வேண்டும்
தண்டனை…

இவைகளை
நடைமுறைப் படுத்துவதற்கு
நான் தயார்
ஒட்டுப்போட
நீங்கள் தயாரா…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக