புதன், செப்டம்பர் 24, 2008

4.மனிதா நாம் என்பது யார்...?

மனிதா நாம் என்பது யார்…?

மனிதா
நம்மை
மனிதனென்று
என்றாவது
உணர்ந்ததுண்டா.?
உணர்வதற் குரிய வாய்ப்பு
நமக்கு
கிடைத்ததுண்டா.?

கைகளையும்
கால்களையும்
கண்களையும்
காதுகளையும்
நம்பி
நம்மை மனிதனாக
எண்ணிக்கொண்டிருக்கிறோம்
மனிதா
எண்ணமல்ல நாம்…

மனிதா
நாம் படிக்கப்படாத
புத்தகமாக இருக்கிறோம்.
கலுவப்படாத
கரையாக இருக்கிறோம்
நாம் கரையும் போது – நம்
கருவைக் காண்போம்…

மனிதா
படைக்கப்பட்ட நாம்
நம்மைப் பற்றி
தெளிவில்லாத போது
நம்மைப் படைத்த
இறையை நாம்
எப்படி தெளிவாய்
விளங்கிருப்போம்…

மனிதா
மதத்தை நாம்
நேசிக் குமளவு
மனிதர்களை
நமக்கு
வாசிக்கத் தெரியவில்லை.
நேசம்
மதத்திற்கு தேவையில்லை
மனிதனுக்கு தேவை;

மதம்
மனிதனை மனிதனாக்கும்
பட்டறை
இந்த பட்டறையில்
படிந்திடாத
நம் நிலை
இருளரை தான்…

மனிதா
மனித நேயம் என்பது
தன்னைத் தான்
நேசிக்கும் மளவு
அனைவரையும்
நேசிப்பதா கும்…

இதில் வேறுபாடோ
மாறுபாடோ
நுழைந்தால் அது
மனித நேசமல்ல
அது வேசம்…

மனிதா
பாம்பு யென்றால்
படை
நடுங்கியது அன்று
இன்றோ
‘பாம்’ என்றால்
நாடே நடுங் குகிறது.
இந்த நடுக்கம் -
நம்
அறிவில் ஏற்பட்ட
விளக்கம்…

பாம்பையும் பாமையும்
அறிந்த நாம்
தனையறியாமல்
இருப்பதேன்…?

மனிதா நம்
வாழக்கையில்
துக்கங்களும்
துயரங்களும்
மலரும் போது
வாடி விடுவோம்
காரண அறிவு
நம்மிடம்
இல்லாததால்
காரியங்களைக்கண்டு
கலங்குகிறோம்;
விதையை நாம்
அறிந்திட்டால்
விதைக்குள் விருட்சத்தை
காண்போம்…

மனிதா
மிருகங்கள்
தன்னைத்தான்
சிந்திப்பதில்லை
சிந்திக்குமாற்றல்
அதற்கில்லை
அதனாலே
அவைகள்
மிருகங்களாய் வாழ்கின்றன
சர்வத்தையும்
சிந்திக்கும் திறன்
நமக்கிருக்கிறதே;
நாம் எப்போது
மனிதனாகப் போகிறோம்…?

மனிதா
களி மண்ணிலிருந்து
முதல் மனிதர்
ஆதமை
இறைவன் படைத்து
தனது ஆத்மாவிலிருந்து
ஊதினான்

உடலோ
களி மண்ணாலானது
ஆத்மா
இறைவனுடையது
இந்த
இரண்டிற்குமிடையில்
நாம் என்பது யார்…?

மனிதா
நம்மை
புதைக்கப் படுமுன்
நம்மிடம்
புதையுண்ட இரகசியத்தை
புரிந்து விடுவோம்
பரிபூரணத்தில்
கலந்து விடுவோம்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக