புதன், செப்டம்பர் 24, 2008

5.ஆசைகள்

ஆசைகள்

ஆசையின் அசைவே
இந்த
பிரபஞ்சத்தின்
பிம்பங்கள்…

அறியப்பட நாடியதால்
அகிலம் படைக்கப்பட்டது
இது
அருளாளனின்
ஆசை…

அருவாயிருந்து-தாயின்
கருவறைக்குள்
ஆரம்பமானது-ஆசையின்
ஒசை…

குழந்தை மீது ஆசை
குலம் மீது ஆசை
பொருள் மீது ஆசை
பொன் மீது ஆசை
பெண் மீது ஆசை
மண் மீது ஆசை…

உண்பதில் ஆசை
உடுத்துவதில் ஆசை
நோக்கியதில் ஆசை
தேக்கியதில் ஆசை…

இப்படி ஆசைகளை
அலங்கரிக்கலாம்
ஆசையாய்…


மனிதனுக்கு
ஆசை இருக்கும் வரையில்
எண்ணத்தில்
ஒளித்துக் கொண்டிருக்கும்
இசை என்ற
எதிர்பார்ப்புகள்…

முயற்சிகளும்
முன்னேற்றங்களும்
முடிசூடுவது
ஆசையின்
முகூர்த்தத்தில்…

அளவுக்குள்
அடங்காத ஆசைகள்
அறிமுகம் தருவது
ஆபத்தின்
யதார்த்தத்தில்…

வாழ்க்கையில்
ஏற்றங்களும்
ஏமாற்றங்களும்
ஆசையின் ராகத்தில்
ஆடிடும்
இராட்டினங்கள்…

நிறைவேறாத
ஆசையினால்
அடக்கப்பட்டும்
சில ஆன்மாக்கள்
ஆடுகின்றது பரதங்கள்…

தன்னை மட்டும்
மறந்து விட்டு
தரணி முழுவதையும்
ஆசைக்கொண்டோம்…

தன்னை
ஆசையாக்கும் போது
பொய் நிலை மாறி
அறிவு
மெய் நிலையில் மலரும்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக