புதன், செப்டம்பர் 24, 2008

6.எல்லாமிருந்தும்

எல்லாமிருந்தும்…

கோடி ரூபாயில்
வங்கிக் கணக்கு
தெருக் கோடியில்
தொடும் வானம்
வரையில்
வசதியான பங்களா…

பல அடுக்கு கட்டிடங்கள்
பல வண்ணங்களில்
வாகனங்கள்…

வசதிகள்
வளமானது தான்…

இருப்பதை யெல்லாம்
எண்ணத்தில்
சேமித்தோம்…

எண்ணி எண்ணி
சேமித்த எண்ணத்தில்
சில
எண்ணிக்கைகள்
தணிக்கையில்
தவறிவிடும் போதும்
நஷ்டங்கள் நம்மை
நலம் விசாரிக்கும் போதும்
மனம் படுகிறதே
கஷ்டம்…

வாழ்க்கை
வசதியாக வாழ்வதற்கு
ஆனால்
வசதி இருந்தும்
பல தருனங்களில்
மனதிற்கு
தேவைப்படுகிறது
விசிறி…

வாழக்கையை
ஏழ்மையாக்கிக் கொண்டால்…?

ஏகனின்
இருப்பிடம் ஏழ்மையில்
என்கிறான்…!

ஏழ்மை என்பது
இல்லாத நிலை…

எது இல்லை…?

எல்லாமிருந்தும்

எண்ணத்தில்
எண்ணிக்கை இல்லை
சிந்தனையில்
சேமிப்பு இல்லை…

அசையும் சொத்தும்
அசையா சொத்தும்
அவருக்குரிய இடத்தில்
அமைதிக்காணும் போது

வேதனையும்
சோதனையும்
நம்
வாழ்க்கையில்
ஏது…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக