புதன், செப்டம்பர் 24, 2008

17.நிம்மதி

நிம்மதி…

பெற்ற அன்னையை
பேணிக் காப்பதில்
நிறைந்து விடும்
நிம்மதி…

வளர்த்த தந்தையை
வாட விடாமல்
வாழ வைப்பதில்
கிடைத்து விடும்
நிம்மதி…

தம்மை நேசிக்குமளவு
பிறரையும் நேசிக்கும் போது
மலர்ந்து விடும்
நிம்மதி…

அண்டை வீட்டாரிடம்
அன்போடு
பழகும் போது
நம்மை அணிந்து கொள்ளும்
நிம்மதி…

உதவிக்கு முன்
உதவுவதில்
உறவு தரும்
நிம்மதி…

அறிவைப் பெற
ஆசானிடம்
நம்மை அர்பணிக்கும் போது
அஞ்ஞானம் போக்கிடும்
நிம்மதி…

மனிதன் மனிதனாக
வாழும் போது
மகுடம் சூட்டி விடும்
நிம்மதி…

நிம்மதி நம்மிடம்
நிறைந்து இருக்கிறது
நாம் வேண்டினால்
நம்முள்ளும் வரும்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக